கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத் தொழினுட்பக் கழகம் (University of Vocational Technology – UNIVOTEC), 2025/2026 கல்வியாண்டிற்கான 17 வகையான பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
வழங்கப்படும் முக்கிய பட்டப்படிப்புகள்:
கல்வியியல் பட்டங்கள் (BEd): ICT, உயிரியல் முறைமைகள், ஆங்கில மொழி கற்பித்தல், பொறியியல் தொழினுட்பம்.தொழினுட்ப பட்டங்கள் (BTech): மென்பொருள் மற்றும் AI, கணினி நெட்வொர்க் மற்றும் கிளவுட் செக்யூரிட்டி, ஹோட்டல் முகாமைத்துவம், உணவு பதப்படுத்துதல், ஊடகக் கலை தயாரிப்பு.பொறியியல் தொழினுட்ப பட்டங்கள் (BEngTech): மெகாட்ரானிக்ஸ், கட்டிடச் சேவைகள், கட்டுமானத் தொழினுட்பம் மற்றும் வள முகாமைத்துவம்.
விண்ணப்பத் தகுதிகள் மற்றும் காலம்:தகைமை:
க.பொ.த (A/L) உயர்தரம் அல்லது NVQ (Level 5/6) அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள்.காலம்: 3 ஆண்டுகள் (வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என இரு பிரிவுகளில் பயிலலாம்).
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைன் (Online) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான uovt.ac.lk அல்லது வழங்கப்பட்டுள்ள பிரத்யேக இணைப்பு மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.தேவையான கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026 பெப்ரவரி 25.








