தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வீடமைப்புத் திட்டத்தை நாளை (பிப்ரவரி 25) ஆரம்பித்து வைக்கவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
📊 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மொத்த வீடுகள்: இந்த ஆண்டு 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்.நேரடி உதவி: 25,000 வீடுகள் நேரடி அரசாங்க உதவியின் கீழ் கட்டப்படும்.நிதியுதவி: 10,000 குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் (10 இலட்சம்) வீடமைப்பு மானியம் வழங்கப்படவுள்ளது.ஒதுக்கீடு: இத்திட்டத்திற்காக 10,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
💰 10 இலட்சம் ரூபாய் மானியம்:
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வழங்கப்படும் இந்த ஒரு மில்லியன் ரூபாய் நிதியானது, ஒரு குடும்பம் தனது சொந்த வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் மீள அறவிடப்படாத (Non-refundable) மானியமாகும்.
🚀 முதற்கட்ட நடவடிக்கை:நாளை (பெப்ரவரி 25) நாட்டின் 13 மாவட்டங்களில், முதற்கட்டமாக 1,500 குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.







