வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இன்று அதிகாலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.
📋 விபத்து விபரங்கள்:சம்பவம்:
பேருந்துகள் மோதியதில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
பயணிகள்:
விபத்து இடம்பெற்ற போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்பது பெரும் அதிர்ஷ்டமாகும்.பாதிப்பு: விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் உடனடியாக மீட்கப்பட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🏥 தற்போதைய நிலை:
சிகிச்சை பெற்று வரும் சாரதிகளில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
👮 விசாரணை:
விபத்து நிகழ்ந்த விதம் குறித்து வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலதிக விபரங்கள் விரைவில்…







