✈️ மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கை விமான சேவைகளின் அவசர அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்த் பதற்றம் மற்றும் பல நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ள சூழ்நிலையில், இலங்கையின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளன.
🔴 விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்SriLankan Airlines மற்றும் FitsAir நிறுவனங்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அந்தப் பகுதிகளின் வான்பரப்பை பயன்படுத்தும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
🛠️ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான விசேட ஏற்பாடுகள்பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவுவதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📢 பயணிகள் கவனத்திற்குவிமான நிலையத்திற்குச் செல்லும் முன்,✔️ உங்கள் விமான சேவை நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும்
✔️ விமான நேரம் மற்றும் நிலையை உறுதிப்படுத்தவும்
✔️ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பவும்
தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்க, தயவுசெய்து உங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே சரிபார்க்குங்கள்.







