இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா (Simaria) பகுதியில், ‘ரெட்பேர்ட் ஏர்வேஸ்’ (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஏர் ஆம்புலன்ஸ்’ (Air Ambulance) விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த அனைத்து 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
📋 விபத்து குறித்த முக்கிய விபரங்கள்:
விமானம்: Beechcraft C90 (ரெட்பேர்ட் ஏர்வேஸ்)பயணம்: நேற்று (பிப் 23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் இருந்து புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டது.மறைவு: இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா ரேடார் அமைப்பிலிருந்து விமானம் மறைந்தது.விபத்து நடந்த இடம்: சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி.
🕯️ உயிரிழந்தவர்கள்:
தொடர் விபத்தொன்றில் 65 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருந்த நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விபரம்:
சஞ்சய் குமார் (Sanjay Kumar) – 41 வயது நோயாளிமருத்துவர் விகாஸ் குமார் குப்தா (Dr. Vikas Kumar Gupta)சச்சின் குமார் மிஸ்ரா (Sachin Kumar Mishra) – மருத்துவர் உதவியாளர் (Paramedic)அர்ச்சனா தேவி (Archana Devi) – உதவியாளர்துரு குமார் (Dhuru Kumar) – உதவியாளர்விவேக் விகாஸ் பகத் (Vivek Vikas Bhagat) – விமானிசவ்ராஜ்தீப் சிங் (Savrajdeep Singh) – துணை விமானி
🌪️ விபத்துக்கான காரணம்?
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாகப் பாதையை மாற்ற (Weather Deviation) விமானிகள் அனுமதி கோரியுள்ளனர். பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழையினால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விமானத்தின் கறுப்புப் பெட்டியை (Black Box) மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.









